Welcome to Jettamil

ஜூன் மாதம் இலங்கை வரும் சர்வதேச நாணய நிதியம் பிரதமர் தகவல்

Share

சர்வதேச நாணய நிதியம் எதிர்வரும் ஜூன் மாதம் 20 ஆம் திகதி இலங்கை வரவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவனங்களின் பிரதானிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.ஜூன் மாத இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாளர் மட்ட உடன்பாடு எட்டப்படும் என நம்புவதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உணவுப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் வகையில் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக குறித்த கலந்துரையாடலின் போது பிரதமர் தெரிவித்துள்ளார்.

10 வீதமான மக்களுக்கு இலவச உணவை வழங்க அரசாங்கம் முடியும் என நம்புவதாக தெரிவித்த  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  அதனடிப்படையில் தற்போதைய நிலவரத்தை உண்மையாக வெளிப்படுத்துவதற்கு அரசாங்கத்திற்கு உதவுமாறு  ஊடக பிரதானிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

எவ்வாறாயினும், தற்போதைய நிலைமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த பிரதமர், பொருளாதாரத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளினால் ஏற்படும் விளைவுகளை நாடு அனுபவிக்க நேரிடும் என சுட்டிக்காட்டியுனார்.

தேவைப்படும் போது அரசாங்கம் பொறுப்புக்கூற வேண்டும், ஆனால் அதே நேரத்தில் பொறுப்பான அறிக்கையை கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரதமர் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.எவ்வாறாயினும், நிதி மற்றும் விநியோக உதவிகளை வழங்குவதன் மூலம் பாதிப்பைக் குறைக்க அரசாங்கம் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருவதாக பிரதமர் சுட்டிக்காட்டினார்.

200 பில்லியன் ரூபா நிதிய பாதுகாப்பு வலையமைப்பு உருவாக்கப்பட்டு வருவதாகவும், ஜப்பானின் நம்பிக்கையை மீளப் பெறுவதற்கும் அவர்களின் ஆதரவைப் பெறுவதற்கும் ஜப்பானுடன் கலந்துரையாடல் நடைபெற்று வருவதாகவும் பிரதமர் தெரிவித்தார்.உணவு மற்றும் மருத்துவப் பொருட்களுக்கான உதவிகளை வழங்குவதற்கு நாடுகள் முன்வந்துள்ளதாகவும், ஆனால் எந்தவொரு நாடும் இலவச எரிபொருளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் பிரதமர் சுட்டிக்காட்டினார்.

இதன்படி அடுத்த சில மாதங்களில் நாட்டைக் கட்டியெழுப்ப ஊடக நிறுவனங்களின் ஆதரவை நம்பியிருப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேலும் தெரிவித்துள்ளார்.கலந்துரையாடலின் போது, பிரதமரின் மூத்த பொருளாதார ஆலோசகர் டாக்டர் ஆர்.எஸ். தி. எச். சமரதுங்க நாட்டின் பொருளாதார நிலைமை குறித்து பார்வையாளர்களுக்கு விளக்கினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை