Welcome to Jettamil

அரசாங்கத்துடன் எந்தவித தொடர்புகளும் இல்லை – சஜித்

Share

மக்கள் நிராகரித்த அரசாங்கத்துடன் தமக்கு எந்த வித தொடர்புகளும் இல்லை எனவும் எனவே போலி பிரசாரங்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இரண்டாம் உலகப் போரின் போது ஹிட்லர் கோயபல்ஸைப் பயன்படுத்தி ஊடகங்கள் மூலம் பொய்களை பரப்பி சமூகமயப்படுத்தியது போன்று தற்போதைய இலங்கை ஜனாதிபதியும் பொய்ப் பிரச்சாரம் செய்யும் கூட்டு அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டு வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

உண்மையான ஊடகவியலாளர்களை கூட இழிவுபடுத்தி, தங்களை ஊடகவியலாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் ஒரு குழுவின் மூலம் உண்மைகளை பொய்யாகவும், பொய்களை உண்மையாகவும் மாற்றும் பெரும் பிரச்சாரம்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

பிரதமர் பதவியை பெற்றுக் கொள்ள,அமைச்சுப் பதவிகளைப் பெற்றுக்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி கலந்துரையாடியதாக தற்போதைய அரசாங்கம் பொய்யான செய்திகளை உருவாக்கி வருகிவதாகவும், மக்கள் ஆணை இல்லாத,மக்களால் நிராகரிக்கப்பட்ட தற்போதைய அரசாங்கத்துடன் ஐக்கிய மக்கள் சக்தி ஒருபோதும் இணையாது எனவும்,எனவே இவ்வாறான பொய்யான மற்றும் போலியான செய்திகளை நம்பி மக்கள் ஏமாற வேண்டாம் எனவும் அவர் தெரித்துள்ளார்.  

அத்துடன் மக்களின் வாக்குரிமைக்கு பெறுமானம் சேர்க்கும் விடயத்தில் என்றும் தான் முன்நிற்பதாகவும்  மக்கள் ஆணையற்ற தற்போதைய அரசாங்கத்துடன் பணத்துக்கும் சலுகைகளுக்கும் அமைச்சுப் பதவிகளுக்கும் விலைபோகும் உறுப்பினர்கள் ஐக்கிய மக்கள் சக்தியிலோ அல்லது ஐக்கிய மக்கள் கூட்டணியிலோ இல்லை எனவும்,என்றும் மக்கள் ஆணையே உயர்வானது எனவும்  சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை