Welcome to Jettamil

கலஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை – சந்தை மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம்

Share

கலஹாவில் கண்டுபிடிக்கப்பட்ட பாறை – சந்தை மதிப்பு குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம்

கண்டி மாவட்டத்தின் கலஹா பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட பாறைக்கு குறிப்பிடத்தக்க வர்த்தக அல்லது சந்தை பெறுமதி இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், குறித்த பாறையின் தாய்ப் பாறைக்குள் “லெப்ரடோரைட்” (Labradorite) எனப்படும் கனியம் மிகச் சிறிய அளவில் மட்டும் படிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. லெப்ரடோரைட் கனியம், அரை-பெறுமதி வாய்ந்த இரத்தினக்கல் வகையைச் சேர்ந்ததாகும் என்றும் அதில் விளக்கப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில், அந்தப் பாறைக்கு உயர்ந்த வர்த்தக அல்லது சந்தை மதிப்பு இல்லை என தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபை தெளிவுபடுத்தியுள்ளது.

இரண்டு நாட்களுக்கு முன்பு, கண்டி – கலஹா, தெல்தோட்டை தோட்டத்தில் அமைந்துள்ள கல்லந்தென்ன ஸ்ரீ முத்து மாரி அம்மன் ஆலயத்திற்கு அருகிலிருந்த கருங்கற்பாறை ஒன்றில் நீல நிற இரத்தினக்கல் இருப்பதாக தகவல்கள் வெளியானது. இதையடுத்து, அந்தப் பாறையை ஆய்வு செய்வதற்காக நேற்று (21) இரவு தேசிய இரத்தினக்கல் மற்றும் தங்காபரண அதிகார சபையின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்றனர்.

அவர்கள் அந்தப் பாறையிலிருந்து மூன்று மாதிரித் துண்டுகளை எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தியதன் அடிப்படையிலேயே, இவ்வாறு அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை