ChatGPT-யிடம் ரணில் கேட்ட கேள்வி! – ChatGPT வழங்கிய அதிரடி பதில்
செயற்கை நுண்ணறிவு (AI) உலகை ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், மனித மனதின் ஆற்றல் மற்றும் மதங்களின் எதிர்காலம் குறித்து தான் ChatGPT-யிடம் வினவியதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், இந்தச் சுவாரசியமான தகவலைப் பகிர்ந்து கொண்டார்:
‘தம்மபதம்’ நூலின் தொடக்கச் செய்யுளை அடிப்படையாகக் கொண்டு, “மனித மனமா அல்லது செயற்கை நுண்ணறிவா? எது உயர்ந்தது?” என்ற கேள்வியை அவர் AI-யிடம் எழுப்பியுள்ளார்.
நீண்ட விவாதத்திற்குப் பிறகு, மனித மனமே மேலானது என்பதை ChatGPT ஏற்றுக்கொண்டதாக அவர் குறிப்பிட்டார். AI என்பது வடிவமைக்கப்பட்ட தரவுகளுடன் (Data) மட்டுமே இயங்கக்கூடியது, ஆனால் மனித மனதின் படைப்பாற்றல் மற்றும் உணர்வுகளுக்கு எல்லையே இல்லை என்பதை அது ஒப்புக்கொண்டதாக ரணில் விளக்கினார்.
புத்த தத்துவங்களை நவீன செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்துடன் இணைத்து, அதன் மூலம் தர்மத்தை நீண்ட காலத்திற்கு நிலைக்கச் செய்வது குறித்து பௌத்த அறிஞர்கள் சிந்திக்க வேண்டும் என அவர் வலியுறுத்தினார். “எதிர்காலத்தை ஆளப்போவது செல்வம் அல்ல, அறிவே!” என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.



