Welcome to Jettamil

பரந்தன் – முல்லை வீதி விபத்து! உயிரிழந்த நான்கு பேரதும் விபரம் வெளியாகியது!

Share

பரந்தன் – முல்லை வீதி விபத்து! உயிரிழந்த நான்கு பேரதும் விபரம் வெளியாகியது!

கிளிநொச்சி – ஏ35 வீதியில் கார் ஒன்றும் பேருந்து ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் பலியாகியுள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த நான்கு பேரதும் விபரம் வெளியாகியுள்ளது

இன்று (12) பிற்பகல் பரந்தனில் இருந்து முல்லைத்தீவு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து ஒன்றின் மீது முல்லைத்தீவு விசுவமடுவில் இருந்து பரந்தன் நோக்கி பயணித்த கார் ஒன்று மோதி விபத்து ஏற்பட்டது.

விபத்தில் சிக்கி விசுவமடு பகுதியைச் சேர்ந்த பொன்னையா பூபாலன் (46 வயது) , சந்திரகுமார் சவேந்திரன் (வயது 34), புன்னைநீராவி பகுதியைச் சேர்ந்த குணரத்தினம் குணதர்ஷன்(வயது 36) , அதே பகுதியைச் சேர்ந்த யுவானி பிரசாத் (வயது 34) ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

இவர்களில் மூவர் விசுவமடு மகா வித்தியாலயத்தில் ஒன்றாக கல்வி கற்று கிளிநொச்சி ரிலேகோ பாமில் ஒன்றாக தொழில் புரிந்த உற்ற நண்பர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை