பாதுகாப்பு தரப்பினரிடம் இருந்து விடுவிக்கப்பட்ட சொந்த காணிகளை மக்கள் ஆர்வத்துடன் கண்டுகளிப்பு!
யாழ்ப்பாணம் பாதுகாப்பு படைப்பிரிவினால் கையகப்படுத்தப்பட்டிருந்த 67.3 ஏக்கர் மக்களது காணிகள் நேற்று உத்தியபூர்வமாக விடுவிக்கப்பட்டுள்ளது
யாழ்ப்பாணம் காங்கேசன்துறை J/235, தென்மயிலை J/ 240 ஆகிய கிராம சேவையாளர் பிரிவிற்குட்பட்ட பகுதி காணிகளை, மக்கள் பார்வையிடுவதற்கான ஒழுங்கமைப்பு வசதிகளை வலி வடக்கு பிரதேச செயலகம், கிராம சேவையாளர்கள் முன்னெடுத்துள்ளனர்.
இதில் விடுவிக்கப்பட்ட காணிகளையும், வீடுகளையும் மக்கள் ஆர்வத்துடன் பார்வையிட்டதுடன் தமது காணிகளின் எல்லைகளையும் அடையாளப்படுத்தியதுடன், சிரமதானப்பணியிலும் ஈடுபட்டனர்.
பாதுகாப்பு படையினரிடம் இருந்த 67.3 ஏக்கர் நிலப்பரப்பினை விடுவித்து தந்த ஜனாதிபதிக்கும், முப்படைத் தளபதியினருக்கும் மக்கள் நன்றியினை தெரிவித்தனர்.