Welcome to Jettamil

இலங்கைக்குக் கடத்தவிருந்த ரூ. 36 இலட்சம் மதிப்பிலான பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதனப் பொருட்கள் பறிமுதல்

Share

இலங்கைக்குக் கடத்தவிருந்த ரூ. 36 இலட்சம் மதிப்பிலான பூச்சிக்கொல்லி, உரம், அழகு சாதனப் பொருட்கள் பறிமுதல்

இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டம், உச்சிப்புளி அடுத்த நத்தைகுளம் கடற்கரையில் இருந்து இலங்கைக்குப் படகு மூலம் கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த, இந்திய மதிப்பில் ரூ. 36 இலட்சம் (இலங்கை மதிப்பில் ரூ. 1 கோடி) மதிப்பிலான உரம், பூச்சிக்கொல்லி, அழகு சாதனப் பொருட்கள் உள்ளிட்டவை நேற்று (அக்டோபர் 16) பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

கடத்தல் மற்றும் கைது விவரம்

சுமார் 38 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த இந்த உரம், பூச்சிக்கொல்லி மற்றும் அழகு சாதனப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கடத்தலில் ஈடுபட்ட முகிலன் (20) மற்றும் கபிலன் (18) ஆகிய இருவரை க்யூ பிரிவு பொலிஸார் கைதுசெய்து, ராமநாதபுரம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்துத் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடற்கரையில் படகை நிறுத்திப் பொருட்களை ஏற்றிக்கொண்டிருந்த சிலரைக் க்யூ பிரிவு பொலிஸார் மடக்கிப் பிடிக்க முயன்றபோது, அவர்கள் கடலுக்குள் தப்பிச் சென்றுள்ளனர்.

கடத்தல் தடுப்பு நடவடிக்கை

இராமநாதபுரம் கடற்கரைப் பகுதி இலங்கைக்கு மிக அருகே இருப்பதால், சர்வதேசக் கடல் எல்லை ஊடாகக் கடல் அட்டை, உரம், பூச்சிக்கொல்லி, சமையல் மஞ்சள், கஞ்சா, ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட பொருட்கள் அதிக அளவு கடத்தப்படுகின்றன.

இந்தக் கடத்தல் சம்பவங்களைத் தடுப்பதற்காக, சுங்கத்துறை, மத்திய மாநில உளவுத்துறை, மரைன் பொலிஸார், இந்திய கடற்படை மற்றும் கடலோரக் காவல் படை உள்ளிட்ட பாதுகாப்பு வட்டார அதிகாரிகள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

ரகசியத் தகவலின் அடிப்படையில் உச்சிப்புளி, களிமண்குண்டு, சல்லி தோப்பு, நத்த குளம் கடற்கரை உள்ளிட்ட பகுதிகளில் ரோந்துப் பணியில் ஈடுபட்டபோதே இந்தக் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்டது.

தொடர்ந்து கடத்தல் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என க்யூ பிரிவு ஆய்வாளர் ஜானகி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை