அரசாங்கத்திற்கு எதிரான ‘மக்கள் போராட்டம்’ ஆரம்பித்து 50 நாட்கள் நிறைவடைந்ததை முன்னிட்டு, கொழும்பில் நேற்றுமாலை அணிவகுத்துச் சென்ற ஆயிரக்கணக்கான ஆர்ப்பாட்டக்காரர்களைக் கலைக்க பொலிசார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரைப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
கொள்ளுப்பிட்டியில் நேற்று பிற்பகல் ஆரம்பமான பேரணி, உலக வர்த்தக மையத்துக்கு அருகில் உள்ள வங்கி மாவத்தை வழியாக, காலி முகத்திடல் மைதானத்தில் உள்ள போராட்ட இடத்திற்கு செல்ல முற்பட்ட போது, பொலிசார் கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.
இதன் போது பேரணியில் பங்கேற்ற மூன்று ஆர்ப்பாட்டக் காரர்கள் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டனர்.
நேற்றுமாலை இடம்பெற்ற இந்தச் சம்பவத்தை அடுத்து, மாற்று வழிகளின் ஊடாக, பேரணி காலி முகத்திடலை அடைந்த்து.
அங்கு போராட்டத்தின் 50 ஆவது நாளை நினைவு கூரும் வகையில் பாரிய எதிர்ப்பு நிகழ்வுகள் இடம்பெற்றன.