Welcome to Jettamil

தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அரசியல் பிரமுகர்கள் வாழ்த்து

Share

உலகத்தமிழர்களால் இன்று கொண்டாடப்படும் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பிரதமர்  ஜனாதிபதி மற்றும் அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச்செய்திகளை வெளியிட்டுள்ளனர் .

உலகத்தின் கண் வாழும் தமிழர்களினால் கொண்டாடப்படும் பண்டிகையான ,தைப்பொங்கல் பண்டிகையை இன்று தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர் . பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி ,பிரதமர் மற்றும் பல அரசியல் பிரமுகர்கள் தமது வாழ்த்துச்செய்திகளை  தெரிவித்து வருகின்றனர் .

அந்த வகையில் விவசாயம் செழிப்படையக் காரணமான சூரிய பகவானுக்கு நன்றி நவிலும் தைப்பொங்கல் தினம், இந்துக்களின் சிறப்புமிக்க கலாசாரம் மற்றும் மதரீதியிலான பண்டிகையாக விளங்குகின்றது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

இந்த வருடமும், சுகாதாரத்துறையின் ஆலோசனைப்படி உங்களதும் உங்கள் அன்புக்குரியவர்களதும் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையிலேயே தைப்பொங்கலை அனைவரும் கொண்டாட வேண்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தமது தைப்பொங்கல் தின வாழ்த்துச் செய்தியில் மேலும்  தெரிவித்துள்ளார்.

பிரதமருடைய பொங்கல் வாழ்த்துச்செய்தியில் நாட்டைக் கட்டியெழுப்பும் ‘சுபீட்சத்தின் நோக்கு’ என்ற உன்னத இலட்சியத்துடன் இலங்கை மக்களாகிய நாம் அனைவரும் ஒன்றுபட்டு முன்னேறிக்கொண்டிருக்கிறோம்.

இலங்கையில் மட்டுமல்லாமல் உலகெங்கிலுமுள்ள தமிழர்கள் அனைவரும் மகிழ்ந்து கொண்டாடும் இந்த தைத்திருநாளானது இன மத பேதம் கடந்து அனைவரும் கொண்டாடி மகிழும் உன்னத பொங்கல் விழாவாக மாறிவிட்டமை மகிழ்வளிக்கிறது.

இந்த மாற்றம் நம் தேசமெங்கும் முழுமையாக மகிழ்வாக மலர வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் மனிதர்களுக்கும் விலங்குகளுக்கும் இயற்கைக்கு மரியாதை செலுத்தும் பக்தி மற்றும் மகிழ்ச்சியாக அமையக்கூடிய தைத்திருநாளாக இத்தினம் அமைய எமது வாழ்த்துக்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ அனுப்பிவைத்துள்ள பொங்கல் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

தை பிறந்தால் வழி பிறக்கும் என்பது மக்களின் நம்பிக்கை அந்த நம்பிக்கையுடன் தைப்பொங்கல் திருநாளைக் கொண்டாடுகின்ற அனைவருக்கும் எனது பொங்கல் தின வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என வடமாகாண ஆளுநர் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் தை பிறந்தால் வழிபிறக்கும் என்று புதிய நம்பிக்கை பொங்கி, தமிழர் தாயக நிலத்தில் தமிழராட்சி தழைத்திட நாமெல்லாம் ஒன்றுபட்டு,

திடசங்கற்பங் கொண்டு பொங்கித்தானாக வேண்டும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தனது தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை