Welcome to Jettamil

தமிழ் மக்களால் இன்று கொண்டாடப்படுகிறது தைப்பொங்கல் திருநாள்…

Share

தமிழர் திருநாளான தைப்பொங்கல் பண்டிகை இன்று எளிமையான முறையில் தமிழ்மக்களால் கொண்டாடப்படுகிறது.

தற்போதைய பொருளாதார நெருக்கடிகள், விலைவாசி அதிகரிப்பு, பொருட்களுக்கான தட்டுப்பாடுகள், பணப் புழக்கம் குறைந்திருப்பது போன்ற காரணங்களாலும், நோய்த்தொற்று நிலைமைகள் காரணமாகவும், வழக்கமான தைப்பொங்கல் உற்சாகங்களை காண முடியவில்லை.

ஆடம்பரச் செலவினங்களைத் தவிர்த்து, எளிமையான முறையில் தமிழர் பண்பாட்டை வெளிப்படுத்தும் வகையிலேயே தைப்பொங்கல் இம்முறை கொண்டாடப்படுகிறது.

இன்று அதிகாலையில் இருந்து ஆலயங்களில் விசேட பூசை வழிபாடுகள்  இடம்பெற்று வருகின்றன.

ஆலய வழிபாடுகளை முடித்துக் கொண்டு, இன்று காலை வீடுகளில் பொங்கலிட்டு சூரியபகவானுக்குப் படையல் செய்யும் பணிகளை மக்கள் ஈடுபட்டுள்ளதைக் காண முடிகிறது.

தைப்பொங்கல் நாளில் கதைப் பிளக்கும் பட்டாசுச் சத்தங்களையோ ஆடம்பரங்களையே இம்முறை அதிகளவில் காணமுடியவில்லை.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை