சர்வதேச நாணய நிதியத்தின் ஒன்பது பேர் கொண்ட அதிகாரிகள் குழுவிற்கும் நிதியமைச்சின் மூத்த அதிகாரிகளுக்கும் இடையில் கொழும்பில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகளில், நாட்டின் கொடுப்பனவு சமநிலையை மறுசீரமைப்பதற்கு மிகவும் தேவையான நிதி ஒருங்கிணைப்பை மேற்கொள்வதில் முக்கிய முன்னேற்றம் காணப்பட்டுள்ளதாக பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சர்வதேச நாணய நிதியத்துடனான அரசின் பேச்சுவார்த்தைகள் தொடக்கத்திலிருந்தே நேர்மறையான திசையில் நகர்ந்துள்ளன.
சர்வதேச நாணய நிதியம் இலங்கையுடன் அதிகாரிகள் மட்ட உடன்பாட்டை எட்டுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்றும் நிதி அமைச்சின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
பொருளாதார உறுதிப்படுத்தல் திட்டத்திற்கு சர்வதேச நாணய நிதியத்தின் நிதிகளை அனுப்புவதற்கு இது முக்கியமானதாக இருக்கும். இது வெளிநாட்டுக் கடன்களைப் பெறுவதற்கான சாதகமான பின்னணியையும் உருவாக்கும் என்றும் அவர் கூறினார்.
அதேவேளை, சர்வதேச நாணய நிதியமும் அரசாங்கமும் அதிகாரிகள் மட்ட உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொண்டாலும், அனுமதி நடைமுறை காரணமாக பெரிய அளவிலான பொருளாதார ஆதரவு கிடைக்க சில மாதங்களுக்கு ஆகலாம் என நிதி அமைச்சின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த நிலையில், அரசாங்கத்துடனான கலந்துரையாடல்கள் குறித்து விரைவில் செய்தியாளர் சந்திப்பு நடத்தப்படும் என்று கொழும்பில் உள்ள சர்வதேச நாணய நிதியத்தின் அலுவலகம், தெரிவித்துள்ளது.
இலங்கைக்கு நிதி ஆதாரங்களை வழங்குவதற்கு, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் தமது ஆதரவை நிபந்தனைகளை இன்னும் குறிப்பிடவில்லை என்றும் கூறப்படுகிறது.