நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மின்விநியோகத் தடை ஏற்படக்கூடும் என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் உற்பத்தித் திறன் முழுமையடையாத காரணத்தினால் சில பிரதேசங்கள் மின்வெட்டுக்கு முகங்கொடுக்க நேரிடும் என அதன் ஊடகப் பேச்சாளர் சுலக்ஷன ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
தேசிய மின் கட்டமைப்பிற்கு 900 மெகாவாட் முழு கொள்ளளவை இணைக்கும் மற்றும் பழுதுபார்க்கும் பணிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டார்.
அதனடிப்படையில் ,நாடளாவிய ரீதியில் பெரும்பாலான பகுதிகளில் அரை மணி நேரம் அல்லது 45 நிமிடங்களுக்கு மின் விநியோகம் தடைப்படும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.