இந்தியாவின் காஷ்மீரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் பகுதியில் இன்று (19.01.2026) காலை ரிக்டர் அளவில் 5.7 மெக்னிடியூட் ஆகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை 11:51 மணியளவில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டது.
இந்நிலநடுக்கத்தின் மையம் பூமிக்கு அடியில் சுமார் 171 கிலோமீட்டர் ஆழத்தில் இருந்ததாக இந்திய நில அதிர்வு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நில நடுக்கத்தால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அல்லது சேதங்கள் குறித்த தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.




