Monday, Jan 13, 2025

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

By Jet Tamil

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்!

நேபாளத்தில் இன்று காலை 6.50 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஒன்று ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக பதிவாகி உள்ளது என்று சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

நேபாளத்தின் லொபுசே என்ற பகுதியின் வடகிழக்கில் 93 கி.மீ. தொலைவிலேயே இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேபாளம் மற்றும் சீனா எல்லையருகே சன்குவசாபா மற்றும் தேபிள்ஜங் என்ற பகுதிகளில் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் குலுங்கியுள்ள நிலையில், இதனை தொடர்ந்து இந்தியாவின் புதுடில்லி, பீகார் போன்ற மாநிலங்களிலும் நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு