Welcome to Jettamil

உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்!

Share

உத்தியோகபூர்வ இந்திய விஜயத்தை முடித்துக் கொண்டு பிரதமர் ஹரிணி அமரசூரிய நாடு திரும்பினார்!

இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், தனது உத்தியோகபூர்வ இராஜதந்திர இந்திய விஜயத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு நேற்று சனிக்கிழமை (ஒக்டோபர் 18) இரவு நாடு திரும்பியுள்ளார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் ஹரிணி அமரசூரிய கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.

இந்த விஜயத்தின்போது அவர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.

அத்துடன், இந்த விஜயத்தின் ஒரு பகுதியாகப் புதுடெல்லியில் நடைபெற்ற “NDTV உலக உச்சி மாநாடு 2025” இல் கலந்துகொண்டு, இலங்கையின் ஜனநாயகம், பொருளாதார மீட்சி, மற்றும் இந்தியாவுடனான கூட்டாண்மை குறித்து முக்கிய உரையை நிகழ்த்தினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் ஹரிணி அமரசூரிய நேற்றிரவு கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை