இந்திய பிரதமர் நரேந்திர மோடி சென்னைக்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். ஹைதராபாத் பயணத்தை முடித்துக்கொண்டு மோடி சென்னை வந்துள்ளார்.
சென்னை வந்த இந்தியப் பிரதமரை, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்றதுடன், சென்னை சர்வதேச விமான நிலையத்தின் புதிய முனையத் திறப்பு விழாவிலும் கலந்து கொண்டார்.
மேலும், சென்னை – ராமகிருஷ்ணா ஆசிரமத்தின் 125வது ஆண்டு விழாவில் பங்கேற்ற இந்திய பிரதமர், சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் வந்தே பாரத் அதிவேக ரயிலின் தொடக்க விழாவில் கலந்து கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.