ஈஸ்டர் பண்டிகையை கிறிஸ்துவின் கருணை, கனிவான அன்பு மற்றும் மன்னிப்புடன் கொண்டாட வேண்டும் என பிரதமர் தினேஷ் குணவர்தன தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.
சிலுவையில் கூட துன்புறுத்துபவர்களை மன்னித்து இரக்கத்தையும் அன்பையும் பரப்பிய கிறிஸ்துவின் வாழ்க்கை இதயங்களை புதிய மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் என்று பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
2019 ஆம் ஆண்டு ஈஸ்டர் ஞாயிறு அன்று 3 கிறிஸ்தவ தேவாலயங்கள் உட்பட 8 இடங்களில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணையின் மூலம் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் அடையாளம் காண வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தனது ஈஸ்டர் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு நடந்தால்தான் ஈஸ்டர் தாக்குதல் சம்பவத்தின் வலிமிகுந்த நினைவுகளைச் சுமந்துகொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி கிடைக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.