பிரதமர் ரணில் விக்ரமசிங்க விடுதலைப் புலிகளுடன் தம்மை பொய்யாக தொடர்புபடுத்துகிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் நேற்று குற்றம்சாட்டியுள்ளார்.
“பிரதமர் விக்கிரமசிங்க என்னை விடுதலைப் புலிகளுடன் பொய்யாக தொடர்புபடுத்தியுள்ளார்.
அவர் ஒருமுறை என்னை பிள்ளையானுடன் தொடர்புபடுத்தினார்.
ரணில் விக்கிரமசிங்க நாடாளுமன்றத்தில் 30 நிமிட உரையில் இருந்து ஒரு சிறிய பகுதியையும் எடுத்திருந்தார்.
மே 9 சம்பவத்தைப் பற்றி நான் உண்மையில் என்ன சொன்னேன் என்பதை அனைவரும் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உரையை நான் தாக்கல் செய்கிறேன்.
பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைக்க வேண்டாம் என பிரதமரிடம் வேண்டுகோள் விடுக்கிறேன்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க 6 தடவைகள் பிரதமராக இருந்த போதும், மறைந்த பாராளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரளவுக்கான அனுதாபப் பிரேரணையை தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக பயன்படுத்தியுள்ளார்.
பிரதமருக்கு நாடாளுமன்ற சட்டம் தெரியும்.
அவர் தனது சொந்த அரசியல் நோக்கத்திற்காகவும், மக்களின் மனதைத் தூண்டுவதற்காகவும் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
குறிப்பாக உணர்ச்சிகள் அதிகமாக இயங்கும் நாளில் இது தேவையற்றது.
அவர் தனது சொந்த அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காக இதை வெளிப்படையாகக் கொண்டு வந்தார், மேலும் இது அனைவருக்கும் தெளிவாகத் தெரியும்.” என்று அவர் மேலும் கூறினார்.
மே 9, வன்முறையை நியாயப்படுத்தியதாக ரணில் விக்கிரமசிங்க, கூட்டமைப்பு உறுப்பினர் சாணக்கியன் மீது குற்றம்சாட்டியதுடன், அவர் அதற்கு வருத்தம் தெரிவித்து, அந்தக் கருத்தை விலக்கிக் கொள்ளாவிடின் நாடாளுமன்ற விசாரணையை நடத்துமாறு சபாநாயகரைக் கோரப் போவதாகவும் எச்சரித்திருந்தார்.