Welcome to Jettamil

உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

Share

உயர்தரப் பரீட்சைக்கான செயன்முறைப் பரீட்சைகள் இன்று ஆரம்பம்

நடைபெற்று முடிந்த 2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செயன்முறைப் பரீட்சைகள் இன்று (20) ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி நடனம், இசை, நாடகம் மற்றும் மற்றும் மனைப் பொருளியல் ஆகிய பாடங்களுக்கான செயன்முறைப் பரீட்சைகள் ஆரம்பிக்கப்படும் என பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இந்தப் பாடங்களுக்கான பாடசாலை விண்ணப்பதாரிகளின் நுழைவுச் சீட்டுகள் அந்தந்த பாடசாலைகளின் அதிபர்களுக்கும், தனியார் விண்ணப்பதாரர்களின் நுழைவுச் சீட்டுகள் விண்ணப்பப் படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக திணைக்களம் அறிவித்துள்ளது.

இது தவிர பரீட்சை திணைக்களத்தின் இணையதளத்துக்குச் சென்று அனுமதி அட்டைகளைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, உயர்தரப் பரீட்சையின் இரண்டாம் கட்ட விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணி எதிர்வரும் 22ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளதாக பரீட்சை திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

விடைத்தாள் மதிப்பீட்டின் முதற்கட்ட மதிப்பீட்டு நடவடிக்கைகள் கடந்த 31ஆம் திகதி ஆரம்பமாகியது.

கடந்த ஜனவரியில் நடைபெற்று முடிந்த உயர்தரப் பரீட்சைக்கு 346, 976 பரீட்சார்த்திகள் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை