Welcome to Jettamil

குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் – மற்றுமொருவர் பொலிசாரால் கைது

Share

முல்லைத்தீவு – குருந்தூர்மலை ஆக்கிரமிப்புக்கு எதிராக கடந்த 21ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட போராட்டம் தொடர்பாக, மேலும் ஒருவர் முல்லைத்தீவு பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கரைதுறைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் சின்னராசா லோகேஸ்வரன் என்பவலே முல்லைத்தீவு பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குருந்தூர்மலை போராட்டம் தொடர்பில் முல்லைத்தீவு பொலிசாரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட இவர், பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னதாக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் துரைராசா – ரவிகரன் மற்றும் கரைதுறைப்பற்று பலபலநோக்குக் கூட்டுறவுச்சங்கத் தலைவர் இரத்தினராசா – மயூரன் ஆகியோரும் விசாரணைக்காக அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டு பின்னர் நீதிமன்றில் முற்படுத்தப்படுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை