Welcome to Jettamil

சுவீடன், பின்லாந்துக்கு புடின் கடும் எச்சரிக்கை

Share

நேட்டோ படைகளுக்கு சுவீடன், பின்லாந்து ஆகிய நாடுகள் அனுமதி வழங்கினால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சுவீடன், பின்லாந்து நாடுகள் நேட்டோவில் இணைவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த துருக்கி தமது நிலைப்பாட்டை மாற்றியதை அடுத்து, நேட்டோவில் இணைவதற்கான தடை நீங்கியுள்ளது.

இந்த நிலையில், ரஷ்ய ஜனாதிபதி புடின் துர்க்மெனிஸ்தானில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது,

“நேட்டோவில் சுவீடன் மற்றும் பின்லாந்து ஆகிய நாடுகள் இணைவது பற்றி ரஷ்யா கவலை கொள்ளவில்லை. அவர்கள் சேர விரும்பினால் சேர்ந்து கொள்ளட்டும்.

இதற்கு முன்னர் அந்த பகுதிகளில் இருந்து அச்சுறுத்தல் எதுவும் இல்லை.

அந்த பகுதிகளில் ராணுவ படைகள் குவிக்கப்பட்டாலோ அல்லது ராணுவ உட்கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டாலோ, எங்களுக்கு எதிராக அச்சுறுத்தல் விடப்பட்டால், அதற்கு எங்கள் தரப்பில் இருந்து பதிலடி தரப்படும். அதே அளவிலான அச்சுறுத்தல் அந்த பகுதியில் ஏற்படுத்தப்படும்” என தெரிவித்து உள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை