இன்று முதல் வடக்கு, கிழக்கில் மழை – வளிமண்டலவியல் திணைகளம்
வளிமண்டலவியல் திணைகளத்தினால் வெளியிடப்பட்ட புதிய அறிவிப்பின்படி, இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் வடக்கு, வட மத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் மழை அதிகரிக்கலாம்.
இந்த மழை, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் இடை இடையே பெய்யக்கூடும். சில பகுதிகளில் 75 மில்லி மீட்டர் வரையான கனமழை பெய்யக்கூடும்.
மேலும், மேற்கு, சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும், கண்டி மாவட்டத்திலும் மாலை மற்றும் இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டையில் சில இடங்களில் மணிக்கு 30-40 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.
மேலும், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில இடங்களில் காலை நேரத்தில் பனிமூட்டம் காணப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது, அந்த பகுதிகளில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும்.
மின்னல் தாக்கம் ஏற்படும் வாய்ப்பும் இருப்பதால், பொதுமக்கள் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைகளம் அறிவுறுத்தியுள்ளது.