15 வயது சிறுமி மாயம்! – பொலிஸார் பொதுமக்களிடம் அவசர உதவி கோரிக்கை
பண்டாரகமை, வீரகெப்பெத்திபொல பிரதேசத்தைச் சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் கடந்த ஒரு மாத காலமாகக் காணாமல் போயுள்ள நிலையில், அவரைத் தேடிக் கண்டுபிடிக்கப் பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
சிறுமி பற்றிய விபரங்கள்:
பெயர்: கரநாயக்ககே ஹசதி திவெத்மி
வயது: 15
காணாமல் போன திகதி: 2025.12.19 முதல் இவர் மயமாகியுள்ளார்.
முகவரி: இல. 89/03/03, வீரகெப்பெத்திபொல மாவத்தை, பண்டாரகமை.
இது தொடர்பாகப் பண்டாரகமை பொலிஸ் நிலையத்தில் அளிக்கப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, பொலிஸார் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். எனினும், இதுவரை எந்தத் தகவலும் கிடைக்காத நிலையில், சிறுமியின் புகைப்படத்தைப் பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
தகவல் வழங்க வேண்டிய எண்கள்:
இந்தப் புகைப்படத்தில் உள்ள சிறுமி தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால், உடனடியாகப் பின்வரும் இலக்கங்களுக்குத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்:
பண்டாரகமை பொலிஸ் நிலையம்: 071 – 8591681 (அல்லது) 038 – 2290222




