Welcome to Jettamil

மது அருந்துவதற்கான வயதை 21 ஆக குறைப்பு..!

Share

இந்தியாவின் அரியானா மாநிலத்தில் மதுபானம் மற்றும் பிற போதைப்பொருட்களை பயன்படுத்துவதற்கு, மற்றும் விற்பதற்கான சட்டப்பூர்வ குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆக குறைத்து அரியானா அரசு சட்ட திருத்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.

இந்தியாவின் பிற மாநிலங்கள் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கு குறைந்த வயது வரம்புகளை நிர்ணயம் செய்திருப்பதால் அரியானாவிலும் குறைத்திருப்பதாக அரியானா மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த திருத்த பிரேரனையில் மூலம் மது அருந்துதல், அதை வாங்குதல் அல்லது விற்பனை செய்வதற்கான குறைந்தபட்ச வயதை 25 லிருந்து 21 ஆண்டுகளாக அரியானா அரசு குறைத்துள்ளது.

அண்மையில் தலைநகர் டெல்லியிலும் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதற்கு மற்றும் விற்பதற்கான வயது வரம்பு 21 ஆக குறைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை