Welcome to Jettamil

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலைகள்  அதிகரிப்பு 

Share

மதுபானம் மற்றும் சிகரெட்டுக்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.

வாட் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்க உற்பத்தி நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன. இதன்படி, மதுபான போத்தல் ஒன்றின் விலையை 520 ரூபாவினாலும், பீர் டின் ஒன்றின் விலை 30 ரூபாவினாலும் அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஜூன் 1ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில்  குறித்த மதுபான போத்தல்களின் விலை அதிகரிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை உள்நாட்டு சிகரெட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக இலங்கை புகையிலை நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.இதன்படி, இன்று நள்ளிரவு முதல் அனைத்து உள்நாட்டு சிகரெட்களின் விலைகளும் அதிகரிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை