சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில், இயக்கப் பணிகள் இன்று முதல் ஆரம்பமாகியுள்ளன. சபுகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் உற்பத்தி நடவடிக்கைகள் இன்று மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏற்பட்ட பிரச்சனைக்கு தற்போது தீர்வு கிடைத்தமையால் சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, முதற்கட்டமாக, உலை எண்ணெய், உற்பத்தி செய்யப்படுகிறது.மசகு எண்ணெய் இன்மையால், கடந்த 2 மாதங்களுக்கு மேலாக சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தின் பணிகள் இடைநிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.