அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு மீண்டும் வலுப்பெற்றுள்ளது.
இதன்படி நேற்றைய தினம் டொலர் ஒன்றின் விற்பனை விலை 330 ரூபா 16 சதமாக பதிவாகியுள்ளது.
இதன் கொள்முதல் விலை 312 31 காசுகளாக காணப்பட்டது.
இதேவேளை, கொழும்பு ஹெட்டிவீதியில் தங்கம் ஒரு பவுன் விலை 10,000 ரூபாவினால் குறைந்துள்ளது.
இதன்படி, 22 கெரட் ஒரு பவுண்டின் விலை 51,250 ரூபாவாகவும், இருபத்தி நான்கு கரட் ஒரு பவுண்டின் விலை 65,000 ரூபாவாகவும் உள்ளதாக அகில இலங்கை ஆபரண சங்கம் தெரிவித்துள்ளது.