உக்ரேன் சரணடைந்தால், உடனடியாகத் தாக்குதல்களை நிறுத்திக் கொள்வதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. உக்ரேனிய வீரர்கள் உடனடியாக ஆயுதங்களைக் கைவிட வேண்டும் என்றும் கிரெம்ளின் பேச்சாளர் டிமிட்ரி பெஸ்கோவ் (Dmitry Peskov) கூறினார்.
அத்துடன், மொஸ்கோவின் கோரிக்கைகளை கீவ் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரஷ்ய ஜனாதிபதியின் அறிக்கையின்படி செயற்படுவதாகவும், சிறப்பு ராணுவ நடவடிக்கை திட்டமிட்டபடி நடந்து வருவதாகவும் கிரெம்ளின் பேச்சாளர் தெரிவித்தார்.
அதேவேளை, ரஷ்யா இந்த ஆண்டு இறுதிக்குள், தனது விவகாரங்களில் தலையிடாமல் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு உக்ரேனிய ஜனாதிபதி உலகத் தலைவர்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.
ரஷ்யாவுடன் உக்ரேன் பேச்சு நடத்த நேரம் வரவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.