அதிமுக கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகளில் நீதிமன்றம் தலையிட முடியாது என எடப்பாடி பழனிச்சாமி தரப்பினர் உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளனர்.
பொதுக்குழு தொடர்பான உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி அணியினர் மேல் முறையீடு செய்துள்ளனர்.
கட்சியின் செயற்குழு பொதுக்குழு முடிவுகள் கட்சி நிர்வாகிகள் தொடர்புடையது. அதில் நீதிமன்றம் தலையிட அதிகாரம் கிடையாது. பொதுக்குழுவின் முடிவுகளை நீதிமன்றம் கட்டுப்படுத்த கூடாது என உயர்நீதிமன்றத்திற்கு உத்தரவிட வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.