Welcome to Jettamil

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!

Share

வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தில் விற்பனை கண்காட்சி!

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்தில் வடமாகாண தொழிற்துறைத் திணைக்களத்தின் அனுசரணையில் இன்று காலை 9:00 மணியளவில் 26.02.2024 விற்பனைக் கண்காட்சி ஆரம்பமானது.

வடமராட்சி கிழக்கு பிரதேச செயலாளர் கு.பிரபாகரமூர்த்தி தலைமையில் ஆரம்பமான குறித்த கண்காட்சி மாலை 05.00 மணிவரை இடம்பெறுவுள்ளது.

வடமராட்சி கிழக்கு பிரதேசங்களில் வசிக்கும் சிறு தொழில் முயற்சியாளர்கள் தங்களது உற்பத்தி பொருட்களை காட்சிப்படுத்தி அதிகளவான விற்பனையில் ஈடுபட்டனர்.

உள்ளூர் உற்பத்தியாளர்களை ஊக்குவிப்பதோடு அவர்களது உள்ளூர் உற்பத்திகளின் தரத்தை மக்கள் மத்தியில் இலகுவாக கொண்டு சென்று உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வடமராட்சிகிழக்கு பிரதேச செயலகத்தில் ஒவ்வொரு மாதமும் குறித்த விற்பனை கண்காட்சி இடம்பெற்றுவருகிறது.

உள்ளூர் உற்பத்திகளில் ஆர்வமுடைய அதிகளவான மக்கள் வருகை தந்து பொருட்களை விற்பனை செய்வதும் வாங்கிச் செல்வதும் அவதானிக்க முடிகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை