பாடகி பவதாரணியின் உடல் சென்னை விமான நிலையத்தை சென்றடைந்தது
சற்றுமுன், இலங்கையிலிருந்து எடுத்து செல்லப்பட்ட பவதாரணியின் பூதவுடல் சென்னை விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. எனினும் இறுதி கிரியைகள் தொடர்பான தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த பவதாரணி கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் சிகிச்சைப் பலனின்றி நேற்றையதினம்(25) மாலை திடீரென உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.