Welcome to Jettamil

சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி, பயங்கர தீ விபத்து

Share

சாலையில் சென்ற வாகனங்கள் மீது விழுந்த சிறிய ரக விமானம்: 2 பேர் பலி, பயங்கர தீ விபத்து

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், போர்ட் வொர்த் அலையன்ஸ் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிய ரக விமானம் ஒன்று நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியதில் 2 பேர் பலியாகியுள்ளனர்.

டாரன் (Tarrant) என்ற இடத்துக்கு அருகே சென்றபோது, விமானம் விமானியின் கட்டுப்பாட்டை இழந்தது.

இதனால், விமானம் அங்குள்ள நெடுஞ்சாலையில் விழுந்து நொறுங்கியது.

இந்த விபத்தில், 2 பேர் உடல் சிதறி சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

விமானம் விழுந்தபோது, அந்தச் சாலையில் சென்று கொண்டிருந்த லாரி மற்றும் கார்கள் மீது மோதியதில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.

விபத்து நடந்த இடம் முழுவதும் கரும்புகை மண்டலமாகக் காட்சியளித்தது. சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடித் தீயை அணைத்தனர்.

இந்த விபத்து குறித்து அமெரிக்க விமானப் போக்குவரத்துத் துறை தற்போது விசாரணை நடத்தி வருகிறது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை