Welcome to Jettamil

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!

Share

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவை!

பண்டிகை காலத்தை முன்னிட்டு விசேட பேருந்து சேவையொன்று இடம்பெறவுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) முதல் இந்த விசேட பேருந்து சேவை இடம்பெறவுள்ளது

பண்டிகைக் காலங்களில் கிராமங்களுக்குச் செல்லும் பயணிகளின் வசதிக்காக இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக இலங்கை போக்குவரத்துச் சபையின் பிரதிப் பொது முகாமையாளர் பண்டுக ஸ்வர்ணஹன்ச தெரிவித்துள்ளார்.

அதன்படி, 200 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதுடன் பண்டிகை காலத்தை முன்னிட்டு எதிர்வரும் 10ஆம் திகதி முதல் தினமும் 12 விசேட புகையிரத சேவைகளை சேவையில் ஈடுபடுத்த தீர்மானித்துள்ளதாக புகையிரத திணைக்களம் நேற்று அறிவித்திருந்தமையும் இங்கு சுட்டிகாட்டத்தக்கது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை