Welcome to Jettamil

கெளதாரிமுனை காற்றாலைத் திட்டம் தொடர்பான விசேட கூட்டம்!

Share

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரி பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட கெளதாரிமுனை தெற்கு கடற்கரை பகுதியில் அமைக்கப்படவிருக்கும் காற்றாலை மின் உற்பத்தித் திட்டம் தொடர்பான கூட்டம் நேற்று (13) காலை 9.00மணிக்கு கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கடற்றொழில் அமைச்சரும், கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான கௌரவ. டக்ளஸ் தேவானந்தா அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் அறிமுக உரையுடன் குறித்த கலந்துரையாடல் ஆரம்பமாகியது.

குறித்த திட்டம் இலங்கை நிலைபெறுதகு சக்தி அதிகார சபையின் மீள் புதிப்பிக்கத்தக்க சக்தி மேம்பாட்டு திட்டமாக அமையவுள்ளது.

மேற்படி கலந்துரையாடலில் வீதி அபிவிருத்தி திட்டம் தொடர்பாக ஆய்வு செய்யப்பட்ட விடயங்கள் தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டன. குறிப்பாக 17 கிலோமீற்றர் நீளமான பிரதான வீதியின் புனரமைப்பு தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது.

இக் கலந்துரையாடல் பாராளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ சுமந்திரன், அங்கஜன் இராமநாதன் ஆகியோரின் பங்குபற்றலுடன், ஜனாதிபதி செயலகத்தின் வடக்கு அபிவிருத்திக்கு பொறுப்பான மேலதிக செயலாளர் எல்.இளங்கோவன், பூநகரி பிரதேச செயலாளர், பூநகரி பிரதேச சபை செயலாளர், துறைசார் திணைக்கள அதிகாரிகள், மாவட்டச் செயலக பதவிநிலை உத்தியோகத்தர்கள், இராணுவ உயரதிகாரிகள், மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை