Welcome to Jettamil

உக்ரைனுடன் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்த ரஷ்யா தயார்: புதின்

Share

உக்ரைனுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாகவும், ஆனால் அதற்கு அந்நாட்டுக்கு ஆயுதங்கள் வழங்குவதை மேற்கத்திய நாடுகள் நிறுத்த வேண்டுமென்றும் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் நிபந்தனை விதித்துள்ளார்.

மாஸ்கோவில் ராணுவம் தொடர்பான இணையதள பிளாக்கர்களுடன் உரையாடிய அவர், ரஷ்ய ஆயுதங்களின் தரம் தற்போது மேம்பட்டுள்ளதாகவும், அதேநேரத்தில் டிரோன் மற்றும் துல்லிய தாக்குதல் தொடர்பான ஆயுத தயாரிப்பில் பின்தங்கி இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

அமெரிக்கா வழங்கிய ஹிம்மர் ராக்கெட்டுகள் மூலம் ககோவ்கா அணையை உக்ரைன் தகர்த்துள்ளதாக குற்றம்சாட்டிய புதின், எதிர்த்தாக்குதலை தீவிரப்படுத்தியபிறகு ரஷ்யாவுடன் ஒப்பிடுகையில் உக்ரைனுக்கு 10 மடங்கு உயிரிழப்பு அதிகம் என்றும் கூறினார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை