Welcome to Jettamil

இன்று இடம்பெறவுள்ள விசேட கட்சித் தலைமைக் கூட்டம்

Share

இன்று (20) காலை விசேட கட்சித் தலைமைக் கூட்டம் நடைபெறவுள்ளது.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் முற்பகல் 11 மணிக்கு கூட்டம் ஆரம்பமாகவுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புத்தாண்டுக்குப் பிறகு கட்சித் தலைவர்களின் முதல் கூட்டம் இதுவாகும்.

புத்தாண்டின் பின்னர் பாராளுமன்றம் எதிர்வரும் 25ஆம் திகதி முதல் தடவையாக கூடவுள்ளதுடன், அன்றைய தினம் பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதேவேளை, ஸ்ரீலங்கன் விமான சேவை, காணி சீர்திருத்த ஆணைக்குழு, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உள்ளிட்ட பல நிறுவனங்கள் எதிர்வரும் பாராளுமன்ற வாரத்தில் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளன.

இதன்படி, எதிர்வரும் 25ஆம் திகதி ஏற்றுமதி கடன் காப்புறுதி கூட்டுத்தாபனமும், 26ஆம் திகதி காணி சீர்திருத்த ஆணைக்குழுவும், 27ஆம் திகதி ஸ்ரீலங்கன் விமான சேவையும் கோப் குழுவின் முன்னிலையில் அழைக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை