அரச ஊழியர்களுக்கு விசேட கொடுப்பனவு அறிவிப்பு! – ரூபா 4,000 வரை சிறப்பு முற்பணம் வழங்க முடிவு!
அரச ஊழியர்களுக்கு ரூபா 4,000/- வரை சிறப்பு முற்பணம் (Special Advance) வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான சுற்றறிக்கையை பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அலோக பண்டார வெளியிட்டுள்ளார்.
அரச ஊழியர்களுக்கு 4,000 ரூபாய் வரை சிறப்பு முற்பணம் வழங்கப்படும்.
இந்தக் கொடுப்பனவுகள் அடுத்த வருடம் ஜனவரி 1, 2026 முதல் பெப்ரவரி 28, 2026 வரை வழங்கப்படும்.
இந்தக் கடன் தொகை பத்து சமமான மாதாந்த தவணைகளில் வசூலிக்கப்படும்.
வருடாந்த வட்டி வீதம் 8 சதவீதமாக வசூலிக்கப்படும்.
சிறப்பு வங்கிக் கடன்கள் அல்லது முன்னர் பெறப்பட்ட சிறப்பு முற்பணங்களுக்கான தவணைகளை திருப்பிச் செலுத்தத் தவறிய எந்தவொரு அரச ஊழியருக்கும் இந்தக் கொடுப்பனவு பொருந்தாது என்று சுற்றறிக்கை தெளிவுபடுத்தியுள்ளது.





