பாரிய நிதி நெருக்கடி காரணமாக இந்தியாவிடம் இருந்து 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் உதவியை கோர அரசு திட்டமிட்டுள்ளதாக இந்திய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.
அதாவது இந்தியாவிடம் இருந்து ஒரு பில்லியன் டொலர் கடன் உதவி பெற பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால், தெரிவித்துள்ளார்.
கொவிட் தொற்று பரவல் காரணமாக நாட்டில் சுற்றுலாத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டு காணப்படுவதால் கடந்த 2 ஆண்டுகளாக கடும் நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.