Welcome to Jettamil

போகிப் பண்டிகை தினத்தில் செய்ய வேண்டியை என்ன?

Share

போகிப் பண்டிகை என்பது ‘பழையன கழித்து, புதியன புகவிடும்’ நாளாகக் கருதப்படுகிறது. அதாவது பழையவற்றையும், பயனற்றவையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது.

ஆண்டின் கடைசிநாள் என்பதால் கடந்த ஆண்டுக்கு நன்றி சொல்லும் நாள் போகிப்பண்டிகை எனவும் கூறப்படுகின்றது.

வீட்டில் பயனற்ற பொருட்களை புறக்கணித்து, வீட்டில் புதியன வந்து சேர வேண்டும் என்ற நம்பிக்கையில் மக்கள் போகிப் பண்டிகையைக் கொண்டாடுகிறார்கள்.

போகிப் பண்டிகை தினத்தன்று வீட்டில் காணப்படும் குப்பைகள் மற்றும் தேவையற்ற பொருட்களை அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும்.

அத்துடன், பல்வேறு தெய்வீக குணங்களை தூண்டுவதன் மூலம் ஆன்மாவை உணர்தல், ஆன்மாவை தூய்மையாக்குதல் போன்ற செயல்பாடுகளை இப்பண்டிகை பிரதிபலித்து காணப்படுகின்றது.

பொங்கல் பண்டிகைக்கு முந்தைய நாளில் போகிப்பண்டிகை கொண்டாடப்படுகிறது.

இப்பண்டிகையன்று  விடியற்காலை பழையப்பொருட்களை எல்லாம் ஓர் இடத்தில் குவித்து எரிப்பது வழக்கம். கொட்டு எனப்படும் போகி மோளத்தை கொட்டுவிப்பார்கள்.

வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துவார்கள். இதனால் பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும்.

கிராமங்களில் பொங்கல் சமயத்தில் இந் நிகழ்வுகளை கண்டுகொள்ள முடியும்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை