Welcome to Jettamil

இலங்கை தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை

Share

இலங்கை தமிழர்களுக்கு தனி நாட்டை உருவாக்க வேண்டும் – மோடியிடம் கோரிக்கை

தமிழர்களுக்கு இலங்கையில் தனி நாட்டை உருவாக்க வேண்டும் என இந்திய பிரதமர் நரேந்திர மோடியிடம் மதுரை ஆதினம் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும் இது தொடர்பில் தெரியவருவதாவது,

இந்திய பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக தமிழகத்திற்கு விஜயம் செய்துள்ள நிலையில் நேற்று முன்தினம் (27) மதுரைக்கு சென்றிருந்தார்.

எனவே மதுரை ஆதீனம் பிரதமரை வரவேற்றதுடன் அவருக்கு கௌரவம் அளித்திருந்தனர். அதனை தொடர்ந்து பிரதமர் மோடி, மதுரை மீனாட்சியம்மன் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மதுரை ஆதீனம், பிரதமர் மோடியை சந்தித்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. கச்சதீவு மீட்கப்பட வேண்டும், இலங்கை தமிழர்களுக்கு தனி நாடு உருவாக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளோம்.

அத்துடன், 2024 ல் பா.ஜ.க. வெற்றி பெற்று மோடி மீண்டும் பிரதமர் ஆவார். மோடி மீண்டும் பிரதமராக என்னுடைய ஆதரவும் ஆசீர்வாதமும் என்றென்றும் உண்டு எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை