Friday, Jan 17, 2025

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

By jettamil

இலங்கை மக்களுக்கு காத்திருக்கும் அபாயம் – விடுக்கப்பட்ட எச்சரிக்கை..!

எதிர்வரும் மே மாதம் வரையில் இலங்கையின் பல பகுதிகளில் வெப்பமான காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் கடந்த இருபத்துநான்கு மணி நேரங்களில் 36.8 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டள்ளது.

காலி, கொழும்பு, மாத்தறை, கம்பஹா, களுத்துறை, புத்தளம், குருநாகல், ஹம்பாந்தோட்டை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் சில பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பத்தை விட அதிக வெப்பம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந் நிலையில், அதிக வெப்பம் காரணமாக மனித உடலுக்கு ஏற்படக் கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள அதற்கேற்ற வழிமுறைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

அத்துடன், இன்று மற்றும் நாளை நாட்டில் உள்ள எந்தவொரு பாடசாலையிலும் அதிக வெப்பநிலை நிலவும் சந்தர்ப்பங்களில் விளையாட்டு நிகழ்வுகள் அல்லது விளையாட்டுப் பயிற்சிகள் மற்றும் ஏனைய வெளிப்புற நடவடிக்கைகளில் மாணவர்களை ஈடுபடுத்துவதைத் தவிர்க்குமாறு அனைத்து பாடசாலைகளுக்கும் கல்வி அமைச்சு அறிவுறுத்தியுள்ளது.

Share This Article

முக்கியச் செய்திகள்

சிறப்புப் பதிவு

நம்மவர் படைப்பு