Welcome to Jettamil

30 கிராம் ஹெரோயினுடன் யாழ்ப்பாணத்தில் சந்தேகபர் கைது!

Share

கொழும்பு மாநகர சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் (வயது 46) இன்று (07) காலை ஹெரோயினுடன் யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

இராணுவ புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இந்த கைது நடவடிக்கையினை முன்னெடுத்துள்ளனர்.

இதன்போது சந்தேகபரிடமிருந்து 30 கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளது. சந்தேகநபர், ஹெரோயினை விற்பனை செய்வதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.

மேலதிக விசாரணைகளின் பின்னர் சந்தேகபர் யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்படவுள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை