நிலவின் தென் துருவத்தில் ஆய்வில் ஈடுபட்டு வரும் சந்திரயான் – 3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் பகுதியை மேல் உயர்த்தி, மீண்டும் அதனை தரையிறக்கும் முயற்சிகள் வெற்றியளித்துள்ளது என இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ அறிவித்துள்ளது.
இதற்கான சோதனை நடவடிக்கைகளை இஸ்ரோ முன்னெடுத்திருந்தது.
குறித்த லேண்டர் மேலே உயர்த்தப்பட்டு, அதனை கிடைப்பகுதியாக நகர்த்தி மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், லேண்டரின் சகல பகுதிகளும் சிறப்பாக இயங்குகிறது என இஸ்ரோ அறிவித்துள்ளது.
நிலவின் தென் துருவத்தில் ஆய்வினை நடத்துவதற்காக அனுப்பப்பட்ட சந்திரயான் -3 இன் விக்ரம் லேண்டர், கடந்த 23 ஆம் திகதி வெற்றிகரமாக நிலவில் தரையிறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.