Welcome to Jettamil

நெடுந்தீவில் ஐவர் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மே 9 ஆம் திகதி வரை விளக்கமறியல்

Share

யாழ். நெடுந்தீவில் ஐந்து பேரை கொலை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் எதிர்வரும் மே மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் 48 மணித்தியாலங்கள் தடுப்பு வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்.

 ஊர்காவற்றுறை நீதவான் ஜெ.கஜநிதிபாலன் முன்னிலையில் சந்தேகநபர் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினர் சந்தேகநபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தினர். விடயங்களை ஆராய்ந்த நீதவான் சந்தேகநபரை எதிர்வரும் மே மாதம் 09 ஆம் திகதி வரை விளக்கமறியல் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்தார்.

இதன்போது, வழக்கின் சான்றுப்பொருட்களும் யாழ். மாவட்ட விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்டன.

எதிர்வரும் 09 ஆம் திகதி சந்தேகநபரை அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தவும் நீதவான் உத்தரவிட்டார்.

 இதனிடையே, கொலைகள் இடம்பெற்ற வீட்டிற்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை