எதிர்வரும் இரண்டு மாதங்களில் டெங்கு பரவும் அபாயம் அதிகம் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.
டெங்கு நோய் பரவல் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஊடகவியலாளர் மாநாடு நேற்று (26) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்றதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலையில் பாரிய கட்டுமானங்கள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும், அந்த வளாகங்களில் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் இருப்பதாகவும் டொக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.