ஜனாதிபதியின் இங்கிலாந்து மற்றும் ஜப்பான் விஜயத்தின் பின்னர் புதிய அமைச்சரவை அமைச்சர்களின் பதவிப்பிரமாணம் இடம்பெறும் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி மேலும் 10 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தமக்கு மேலும் பத்து அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வழங்குமாறு ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவும் ஜனாதிபதியிடம் எழுத்து மூலம் கோரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பு, இரத்தினபுரி மற்றும் களுத்துறை மாவட்டங்களின் மாவட்டத் தலைவர்கள் இந்தப் பட்டியலில் உள்ளடங்குவதாக கட்சித் தொடர்பான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் வகிக்கும் அமைச்சுப் பதவிகளுக்கு மேலதிகமாக இதுவரை 18 அமைச்சரவை அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளதுடன், தற்போதைய அரசாங்கத்தில் அரச அமைச்சுப் பதவிகளின் எண்ணிக்கை 38 ஆகும்.