மறைந்த இரண்டாம் எலிசபெத் மகாராணிக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இலங்கையின் அரசியல் பிரதிநிதிகள் கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு , தமது அஞ்சலியையும் அனுதாபத்தையும் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (15) மாலை தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எல்.எம். அதாவுல்லா கொழும்பில் உள்ள இங்கிலாந்து உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்று அங்கு வைக்கப்பட்டிருந்த இரங்கல் புத்தகத்தில் கையொப்பமிட்டு தனது அஞ்சலியையும் அனுதாபத்தை செலுத்தியுள்ளார்.
இதன் போது தேசிய காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட பிரதி தலைவர் கலாநிதி ஏ.உதுமா லெப்பை,கட்சியின் பொருளாளர் சட்டத்தரணி ஜே.எம். வசீர்,இளைஞரணி அமைப்பாளர் . ஜே.பி.ஜே. சம்பத் மற்றும் கட்சியின் கொள்கைகள், சட்டம் மற்றும் உள்நாட்டு விவகாரங்களுக்கான ஆலோசகர் .சட்டத்தரணி மர்சூம் மௌலானா ஆகியோரும் சென்று குறித்த விசேட அனுதாபப் புத்தகத்தில் தமது கை யொப்பங்களையும் இட்டுள்ளனர்.