Welcome to Jettamil

தையிட்டி விகாரை விவகாரம் : கஜேந்திரகுமாரிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

Share

தையிட்டி விகாரை விவகாரம் : கஜேந்திரகுமாரிற்கு நீதிமன்றம் அழைப்பாணை

மல்லாகம் நீதிமன்றம், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அவர்களிற்கு (Gajendrakumar Ponnambalam)அழைப்பாணை விடுத்துள்ளது.

அதாவது, தையிட்டி விகாரை விவகாரம் தொடர்பில் குறித்த அழைப்பானை நேற்று (11) பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த விவகாரம் தொடர்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மேலும் தெரிவிக்கையில்,

“ஜனாதிபதி அநுர (Anura kumara dissanayake) தலைமையில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கடந்த ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் போது, மக்களினுடைய தனியார் காணிகளை அபகரித்து தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானங்களை அகற்றி மக்களின் காணிகள் மக்களுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியிருந்தேன்.

இதநை தொடர்ந்து, விகாரையை இடிக்க வாரீர் என்று நான் அழைப்பு விடுத்ததாக விளம்பரம் வடிவமைக்கப்பட்டு போலியான பிரசாரம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இவ் விடயம் அறிந்து, உடனே எனது உத்தியோக பூர்வ முகநூல் மற்றும் எக்ஸ் தளத்தினூடாக குறித்த செய்தி போலியானது என பதிவிட்டிருந்தேன். அத்துடன் ஊடக சந்திப்பிலும் போலி விளம்பரம் குறித்தும் எனது நிலைப்பாட்டையும் தெளிவுபடுத்தியிருந்தேன்.

இவ் விடயத்தை மறுத்து எனது தெளிவுபடுத்தல்களை வெளிப்படுத்தியிருந்த போதிலும் இலங்கை பொலிஸாரால் மல்லாகம் நீதிமன்றில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு 14 ஆம் திகதிக்கு அழைப்புக்கட்டளை எனக்கு அனுப்பப்பட்டுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை