Welcome to Jettamil

இறக்குமதி வாகனங்களின் புதிய விலைகளை வெளியிட்ட நிறுவனம்

vehicle-import

Share

இறக்குமதி வாகனங்களின் புதிய விலைகளை வெளியிட்ட நிறுவனம்

வாகன இறக்குமதி தடையை நீக்கி, புதிய வரி விகிதங்களை நடைமுறைக்கு கொண்டுவரும் அரசாங்க முடிவினைத் தொடர்ந்து, யுனைடெட் மோட்டார்ஸ் லங்கா பிஎல்சி அதன் வாகன வரிசைக்கான புதிய விலை பட்டியலை வெளியிட்டுள்ளது.

புதுப்பிக்கப்பட்ட விலைகள் தற்போது உள்ள மாற்று விகிதங்கள், அரசாங்க வரிகள் மற்றும் 18% விற்பனை வரி தவிர்க்கப்பட்ட மற்ற எல்லா வரிகளையும் பிரதிபலிக்கின்றன.

இதன்படி, வாகனங்களின் புதிய விலை மற்றும் வரிகள் குறித்த அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன:

மிட்சுபிசி அட்ரேஜ் – 11.23 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் – 14.99 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி எக்ஸ்பாண்டர் கிராஸ் – 16.1 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி அவுட்லேண்டர் ஸ்போர்ட் – 15.675 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி எக்லிப்ஸ் கிராஸ் – 19 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி எல்200 – 18.135 மில்லியன் ரூபா பிளஸ் வரி
மிட்சுபிசி மொன்டெரோ ஸ்போர்ட் – 49.58 மில்லியன் ரூபா பிளஸ் வரி

மேலும், இறக்குமதி செய்யப்பட்ட வாகனங்கள் ஏற்றப்பட்ட கப்பல் எதிர்வரும் 25 மற்றும் 27 ஆம் திகதிகளில் இலங்கைக்கு வரப்போகும் என தகவல் வெளியாகியுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை