Welcome to Jettamil

தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பம்

Share

இந்திய அரசிடம் ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து,  உண்ணாநோன்பிருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 35ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஆரம்பமாகிறது.

வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்,  சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும்,  தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் ஆகிய ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் 15ஆம் திகதி, நல்லூர் கந்தன் ஆலய முன்றலில், தியாகதீபம் திலீபன் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்திருந்தார்.

இந்திய, அரசாங்கம் இந்தப் போராட்டத்தை அலட்சியம் செய்த நிலையில், 12 ஆவது நாளான, செப்ரெம்பர் 26ஆம் திகதி தியாக தீபம் திலீபன் உயர்நீத்தார்.

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் ஆண்டு தோறும், செப்ரெம்பர் 15ஆம் திகதி தொடக்கம், 26ஆம் திகதி வரையான 12 நாட்களும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆண்டு தியாகதீபம் திலீபனின் நினைவேந்தலை நல்லூரில் அவரது நினைவுத் தூபி அமைந்துள்ள இடத்தில் முன்னெடுப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.

இன்று காலை இந்த நினைவேந்தல் ஏற்பாடுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.

அத்துடன், தியாகதீபம் திலீபனின் நினைவு ஊர்தி பவனி ஒன்றுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை

புதிய பதிவுகள்

முக்கியச் செய்திகள்

பிரபல்யமானவை